முக்கிய சர்வதேச தொடர்களில் ஒன் றான இந்தியன் வேல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் 5ஆவது இடத்தில் இருப்பவரும், நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலிய ஓபன்) பட்டத்தை வென்றவ ருமான மேடிசன் கீஸ், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென் காவை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை பறிகொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-0, 6-1 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸை புரட்டியெடுத்து இறுதிக்கு முன்னேறி னார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸ், சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆன்டிரிவா, தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக்கை 7-6 (7-1), 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். ஆன்டிரிவாவை விட ஸ்வியாடெக் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.