விடிந்தால் தைப் பொங்கல்.ரேகாதன் செல்லை எங்கோ தவற விட்டிருந்தாள்.
ஷாப்பிங் போன இடத்தில் தான் எங்கேயோ மறந்து வைத்து விட்டாள் போலிருக்கிறது ....! மூளைக்குள் மிக்ஸி சுழன்றது.
வாழ்த்துக்கள் வருமே . பதில் அனுப்பனுமமே என்று தவித்துத்தான் போனாள்.
தம்பியிடம்போய் அவனுடைய போனை கேட்டாள்.
."ஒனக்கு அப்படித்தான் நல்லா வேணும்...!"என்றபடியே செல்லக் கொடுக்காமல்
ஓடியே போய் விட்டான்.
தம்பியா அவன். தறுதலை என்று கறுவிக்கொண்டாள்.
பொங்கல் கொண்டாட்டம் குதூகலம் மகிழ்ச்சி எல்லாமே ஒரு நொடியில் உடைந்து சிதறிப் போயின.
தம்பி உறங்கியதும் அவனது போனை எடுத்து தன்னுடைய செல்லுக்கு ஓர் அழைப்பு கொடுத்துப் பார்த்தாள்...!
ஆச்சர்யத்திலும் ஆச்சரியமாக மறு பக்கத்திலிருந்து ஒரு பெண் பேசிற்று.
"ஹலோ... என் போனை இன்று எங்கோ தவற விட்டு விட்டேன். எங்கே இருக்கிறீர்கள். சொல்லுங்கள். நல்ல சன்மானம் தருகிறேன் பிளீஸ் ...." ரேக்கா படபடத்தாள்
"அக்கா ஒங்க போன் சென்னை சில்க்ஸில் சாரிகளுக் கடியில் இருந்ததாம். அம்மாவுக்கு விற்பனை பிரிவில் வேலை. பொங்கல் கூட்டத்தில் எடுத்து வைத்த செல்லை கவனிக்கவே
நேரமில்லையாம்.இப்பதான் கொண்டு வந்து எனக்கிட்ட கொடுத்தாங்க.
'யாருதுன்னு கேட்டு கொடுத்துடும்மா .பொங்கலும் அதுவுமா செல்லை காணாம தவிச் சுப் போவாங்க னு ' சொன்னாங்க "
"சிஸ்டர் எங்கே இருக்கீங்க... சொல்லுங்க...
காலையில் நானே வர்றேன். நாளக்கு உங்க ளோடத்தான் நம்ம பொங்கல் கொண்டாடட் டம் எல்லாம் ... " செல்லில் தேன் வழிந்தது.
விடிந்ததும்
கார் ட்ரைவரை வரச்சொல்லி நெற்குப்பம் பக்கத்தில் உள்ள ஒரு முருகன் கோயிலுக்குப் போகச் சொன்னாள் .நெற்குப்பம் பக்கம் என்றதும் ட்ரைவர் குழப்பத்துடனே காரைக் கிளப்பிக் கொண்டு போனார்.
நேற்குப்பம் முருகன் கோயிலுக்கு வந்தவுடன்,காரி லிருந்து இறங்கிய ரேக்காவிடம் ஒடி வந்த அந்த சிறுமி ரேக்கா வின் செல்லைக் கொடுத்ததும்.
கூடவே நின்ற ட்ரைவரைப் பார்த்ததும்...
"அப்பா நீங்களா... இங்க எப்படி " என்று வியப்பாகக் கேட்க...
"ஒங்க பெண்ணா சார்" என்று தன் ட்ரைவரிடம் கேட்ட ரேகாவுக்கு எல்லாமே இன்பக் கனவுபோல இருந்தது.
செல் கிடைத்த மகிழ்ச்சியும் நல்ல குடும்பத்தினரின் சந்திப்பு கிடைத்த மகிழ்ச்சியும் இரட்டிப்பு இன்பமாகப் பொங்கியது
ரேகாவுக்கு.
பரிசுப் பொருள்களுடன் சிறுமியையும் அவள் அப்பாவையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி நடந்தாள் ரேக்கா.
============
குடந்தை பரிபூரணன்
============