tamilnadu epaper

இலங்கைக்கு பிரதமர் மோடி போகக்கூடாது: வைகோ

இலங்கைக்கு பிரதமர் மோடி  போகக்கூடாது: வைகோ


புதுடெல்லி, மார்ச் 20–

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார். 

 இது குறித்து மாநிலங்களவையில் வைகோ பேசகையில், " கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி 25ம் தேதி முதல் 45 நாள்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி உள்ளது. இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு. 

அனாதைகளா?

  தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது. இந்திய கடற்படை அங்கே என்ன செய்கிறது...? இந்திய அரசுக்கு நாங்கள் வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா? “நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இலங்கை பயணம் ஏன்?

 இன்றளவும் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி என்ன காரணத்துக்காக இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? அந்த நாட்டுக்கு பிரதமர் போகக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிர்மலா பதில்

இதையடுத்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இந்திய அரசு வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவு அமைச்சரும் பிரதமரும் உதவி இருக்கிறார்கள், என்றார்.