உடுமலை, ஏப்.19-
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 8ம் தேதி கம்பம் நடப்பட்டு தினமும் கம்பத்துக்கு பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலையில் மாரியம்மன் திருத் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் மாலையில் தேரோட்டம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.