கால்பந்து உலகின் இள வரசன் என ரசிகர்க ளால் அன்போடு அழைக்கப்படும் பிரேசிலின் நெய்மர், மெஸ்ஸி (அர்ஜெண்டினா), ரொனால் டோ (போர்ச்சுக்கல்) ஆகியோருக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் ஆவார். நெய்மர் தற்போது சவூதி அரேபிய லீக் தொடரில் இருந்து வெளி யேறி தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் (பிரேசில் கிளப்) விளையாடி வருகிறார். இந்நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உல கக்கோப்பை தொடரின் தகுதி சுற்று ஆட்டத்தில் இருந்து காயம் காரண மாக நெய்மர் விலகியுள்ளார். சமீ பத்தில் 17 மாதங்களுக்குப் பின் நெய்மர் பிரேசில் அணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடது தொடை காயம் காரணமாக உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டியில் 5ஆவது இடத்தில் உள்ள பிரேசில், மார்ச் 20ஆம் தேதி கொலம்பி யாவையும், மார்ச் 25 அன்று அர்ஜெண்டினாவையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த 2 ஆட்டங்களும் பிரேசில் அணிக்கு மிக முக்கியமானது என்ற நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் விலகி இருப்பது பிரே சிலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.