tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயம்.

எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயம்.

 "வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே!
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை!

                         திருமுருகாற்றுப்படை.

   வேலூர் மாவட்டத்தில், காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் வழியில் கே.வி.குப்பம் தாலுகா,மேல்மாயில் கிராமத்திலுள்ள மயிலாடும் மலையில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்திவேல் முருகன் திருக்கோயில்.

  இக்கோவிலுள்ள முருகப் பெருமான் ஒன்பதே முக்கால் அடி உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய மூலவர் திருமேனியுடன் கருவறைக்கு உள்ளே கருவறை என்னும் சூட்சமமான அமைப்பில் எழுந்தருளி காட்சி தருகிறார்.

   மற்ற முருகன் கோயில்களில் இல்லாத வகையில்,இத் திருத் தலத்தில் வள்ளி மற்றும் தெய்வானை அம்மன்கள் தனித்தனித் சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

   இத்திருக்கோவில் 1920-ம் ஆண்டு கிருபானந்த வாரியார் சுவாமிகளால் அடிக்கல் நாட்டப்பட்டு 1994-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இக்கோயில் முழுமையாக உருவாக காரணமாக அமைந்தவர்,மிளகாய் சித்தர் சுவாமிகள் அவரது ஜீவசமாதி இத் திருக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

   திருக்கோயிலின் முக்கிய நேர்த்திக்கடன் தேங்காய் கட்டுதல் ஆகும்.நமது வேண்டுதல்களை தேங்காயில் அவரது பெயர்களை எழுதி கட்டினால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    ஸ்ரீ சக்தி மாலை முருகன் கோவிலில்,ஒவ்வொரு மாதமும்  கிருத்திகையன்று காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெறும் என்பது கூடுதல் சிறப்பு. 

   மயிலாடும் மலை முருகர் கோவிலுக்கு செல்லுவோர் படிகள், மற்றும் மலைப்பாதை சாலைகள் வழியாகவும் செல்லலாம்.

    திருக்கோவிலுக்கு செல்ல வேலூரில் இருந்தும் காட்பாடியில் இருந்தும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


திரு.ராம்குமார் வெற்றிவேல்,

22,பலராம முதலியார் தெரு,

சின்னல்லாபுரம்,வேலூர் 632001.