tamilnadu epaper

எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் குடியேறிய ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு நெருக்கடி

எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் குடியேறிய ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு நெருக்கடி

எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் குடி யேறியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய குழந்தைகள் 21 வயதை நெருங்கி வரும் நிலையில் அவர்களது எதிர்காலம் நிச்சய மற்றதாக மாறியுள்ளது. கடந்த காலத்தில் 21 வயதை கடக்கும் இந்தியர்க ளுக்கு அந்த வயது கடந்த பிறகு எச்1-பி விசா பெறு வதற்கு இரண்டு ஆண்டுகள் வரை காலம் கொ டுக்கப்பட்டது.


மேலும் சிறார்களின் பெற்றோர் எச்1-பி விசா நபர்களாக இருந்தால் அவர்களால் எளிமையாக விசா பெற முடியும். இந்த விதிகள் அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி யேற்ற பிறகு கொண்டு வந்துள்ள குடியேற்றச் சட்டங்களின்படி மாற்றப்பட்டு விட்டன. இதனால் அவர்களால் தற்போது அமெ ரிக்காவில் வசிக்க முடியாது என்ற சூழல் உருவாகி யுள்ளது. 2023 மார்ச் நிலவரப்படி சுமார் 1.34 லட்சம் இந்தியக் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் கிரீன் கார்டுகளைப் பெறுவதற்கு முன்பே 21 வயதை கடந்து விடுவார்கள் என கூறப் பட்டிருந்தது. அமெரிக்க குடியேற்ற விதிகளில் செய் யப்பட்ட கடுமையான திருத்தங்கள் காரணமாக சரியான முறையில் விண்ணப்பித்திருந்தால் கூட விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதற்கு சுமார் 12 முதல் 100 ஆண்டுகள் வரை ஆகும் என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஊதிய தொழிலாளர்களை தரும் எச்1- பி விசா எச்1-பி விசா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது சிறந்த தொழிலாளர்களை பணியமர்த்து வதல்ல, மாறாக அதிக சம்பளம் கொடுக்கப்பட வேண்டிய வேலைகளுக்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை பயன்படுத்தி குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு வருவதற்கானது என்றும் குடியேற்ற விதி முறைகள் மாற்றப்படும் போதே அமெரிக்க செனட் டர் பெர்னி சாண்டர்ஸ் அதனை விமர்சித்தார். சாண்டர்ஸ் இதற்கு ஒரு ஆலோசனையையும் முன்வைத்தார். எச்1-பி விசா கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும்.


இதன் மூலம் வரு டத்திற்கு 370 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வருவாயாக ஈட்ட முடியும். இந்த வருவாய் மூலமாக அமெரிக்க மாணவர்களுக்கு அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட துறைகளில் தரத்தை மேம்படுத்துவதற்காக 20,000 மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கலாம் என்றார். எச்1-பி தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதி யத்தை அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் ஊதி யத்தின் அளவிற்கு உயர்த்த வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களின் குறைந்த ஊதியத்தை காட்டி அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் அமெரிக்க நிறுவ னங்களின் செயலை குறைக்கமுடியும் எனவும் வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக பணி அமர்த்துவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.