சென்னை மார்ச் 16 -
சிட்டி யூனியன் வங்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தம் செய்து இதன் ரசிகர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கணக்கு துவக்க ஒப்பந்தம்செய்துள்ளது என்று இந்த வங்கியின்நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என். காமகோடி தெரிவித்தார்.
இந்த கூட்டு ஒப்பந்தம் பற்றி என் காமகோடி கூறியதாவது:
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ரசிகர்கள் சிறப்பு வசதி கொண்ட சேமிப்பு கணக்கு துவக்கலாம். கடன்கள் வழங்குதல், கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் இந்த கார்டுகளுக்கு சலுகை தள்ளுபடி வசதி உண்டு. சன்ரைசர்ஸ் கிரிக்கெட் குழுவின் விற்பனை பொருட்களான ஜெர்சி சட்டைகள் தொப்பிகள் மற்றும் நினைவு பொருட்கள் ஆகியவற்றைவாங்க சிட்டி யூனியன் வங்கி கடன் வழங்கும்.
சிட்டி யூனியன் வங்கி விரைவான துல்லியமான நம்பிக்கையான டிஜிட்டல் வங்கி சேவையை வழங்குகிறது. இத்துடன் செல்போனில் வங்கி பணியாற்ற வசதியும் வழங்குகிறது. இந்த வங்கியின் ஆன்லைன் வசதி மூலம் சன்ரைசர்ஸ் குழுவின் பல்வேறு பொருட்களை ரசிகர்கள் எளிதில் வாங்க முடியும்.
இது சாதாரண வங்கி நிதி சேவை மட்டும் இல்லாமல், இந்த குழுவின் ரசிகர்களை இந்த விளையாட்டுக்கு மேலும் ஆர்வத்துடன் செயல்பட உதவுகிறது.
சிட்டி யூனியன் வங்கி பல்வேறு நவீன வங்கி சேவைகள் செல்போன் வங்கி சேவை போன்றவற்றை தொலைநோக்குடன் ஏற்கனவே அமல்படுத்தி உறுதுணையாக உள்ளது இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 840 கிளைகள் உள்ளது நாடங்கிலும் 1697 ஏடிஎம்கள் உள்ளது என்றும் என் காமகோடி தெரிவித்தார்
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் சன்ரைசர்ஸ் குழுவின் தலைமை செயல் அதிகாரி கே. சண்முகம் பேசுகையில், சிட்டி யூனியன் வங்கி எங்களது பிரத்தியேக வங்கி பார்ட்னராக இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. எங்கள் ரசிகர்களுக்கு பல்வேறு வங்கி சேவைகளை எளிதில் விரைவாக சிட்டி யூனியன் வங்கி வழங்குவது குறித்து பெருமிதம் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.