ரஷ்யா, சீனா மற்றும் திபெத்துக்கு இடையே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் மங்கோலியா அமைந்துள்ளது. இதன் விளைவாக, ஆண்டின் 10 மாதங்கள், மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் மங்கோலியாவில் பயங்கர பனிப்புயல் வீசி வருகிறது.
இதன் காரணமாக மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக மங்கோலியா நாடு முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது. பனிப்புயலால் பயிர்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் சேதமடைந்தன.
இதனால் அங்கு உணவு பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மங்கோலியாவில் கடும் வறட்சி காரணமாக உணவு பற்றாக்குறையால் 70 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.