"ஏன் முடியாது? அதற்கு" />
ஒரு நாள், சூதமா முனிவர் வந்து உட்கார்ந்ததும், அவரை பார்த்து, "கட்டெறும்பு, காசிக்குப் போய் முக்தி பெற முடியுமா?' என்று கேட்டனர் மற்ற முனிவர்கள். "ஏன் முடியாது? அதற்கு ஒரு கதை இருக்கிறது; சொல்கிறேன் கேளுங்கள்...' என்றார் சூதமா முனிவர். இன்று நல்ல கதையை கேட்கப் போகிறோம் என்று, முனிவர்கள் சந்தோஷப்பட்டு, "சொல்லுங்கள்... அது எங்கள் பாக்கியம்...' என்றனர். கதை சொல்ல துவங்கினார் சூதமா முனிவர்... ஒரு கிராமத்தில், ஒரு பாட்டி இருந்தார். கடைசி காலத்தில், காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று புறப்பட்டாள். வழியில் சாப்பிடுவதற்காக, ஒரு மடி சஞ்சியில் சில பட்சணங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அந்த மடி சஞ்சியில் எப்படியோ ஒரு கட்டெறும்பு புகுந்து, அதுவும் காசிக்கு போய்ச் சேர்ந்தது. பாட்டி காசிக்குப் போனதும், மடி சஞ்சியை எடுத்து உதறினாள். அதிலிருந்து, கட்டெறும்பு கீழே விழுந்தது. பாட்டி கட்டெறும்பைப் பார்த்ததும், தன் காலால் ஒரு மிதி மிதித்து, ஒரு தேய்ப்பு தேய்த்தாள். உருக்குலைந்து மரணமடைந்தது கட்டெறும்பு. எறும்பு, காசி ஷேத்திரத்தில் மரணமடைந்ததால், சிவகணங்கள் வந்து, அந்த ஜீவனை, சகல மரியாதைகளுடன் கைலாசத்துக்கு அழைத்துச் சென்றன. காசியில் மரித்ததால் கைலாச வாசம் கிடைத்தது கட்டெறும்புக்கு. இப்படிப்பட்ட காசி ஷேத்திரத்தின் மகிமை, சொல்லில் அடங்காது என்று சொல்லி, கதையை முடித்தார் சூதமா முனிவர். எல்லா முனிவர்களும், "ஆஹா... இன்று ஒரு நல்ல கதையைக் கேட்டோம்...' என்று சந்தோஷத்துடன் சாயங்கால அநுஷ்டானத்துக்குச் சென்றனர். அதாவது, தினம் ஏதாவதொரு புண்ணிய சரித்திரம், புண்ணிய தேசங்கள், மகான்களின் சரித்திரம் போன்ற ஆன்மிக விஷயங்களில் பொழுதை கழிக்க வேண்டும். புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய நதி தீரங்களில் வாசம் செய்து, பகவானையே தியானம் செய்து கொண்டிருந்தால், கடைசியில் புண்ணிய லோகத்தை அடையலாம். வெட்டிப் பேச்சிலும், வேண்டாத விவகாரங்களிலும் ஈடுபட்டால், புண்ணிய லோகத்தை எட்டிக்கூட பார்க்க முடியாது. பிறகு, கைலாசம், வைகுண்டம் என்பதெல்லாம், பேச்சளவில் தான் இருக்கும். நல்ல ஜென்மாவை நல்ல வழியில் கழிக்கலாமே! -M. Radhakrishnan Breaking News:
"கட்டெறும்பு, காசிக்குப் போய் முக்தி பெற முடியுமா?