tamilnadu epaper

கனடாவின் புதிய பிரதமர் : மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமர் : மார்க் கார்னி

கனடாவின் லிபரல் கட்சியின் தலைவரா கவும், புதிய பிரதமராகவும் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற, அமைச்சரவை அனுபவமும் இல்லாமல் கனடாவில் ஒருவர் பிரதமராவது இதுவே முதல் முறை. கார்னி இதற்கு முன் கனடா வின் மத்திய வங்கி ஆளுநராகப் பணியாற்றிய வர். இந்த பிரதமர் மற்றும் கட்சி தலைமைக்கான தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரான கிறிஸ்டி யா ஃப்ரீலாண்டை தோற்கடித்து சுமார் 86 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜன்ஸ்டின் ட்ரூடோ மீது அக்கட்சியில் கடுமையான அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.


இந்நிலையில் புதிய பிரதமருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 15.2 லட்சம் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட னர். 2013 முதல் தலைமை பதவியில் நீடித்து வந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிராக கனடாவும் வரி விதிப்பதை ஆதரித்து வரும் கார்னி, கனடாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கின்றார். அமெரிக்காவின் வரிகளை உறுதியாக எதிர்கொண்டு உரிய தீர்வு கொடுப்பேன் எனவும் வாக்குறுதியை கொடுத்துள்ளார்.


இதற்கான பதிலடி நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் முத லீட்டை அதிகரிப்பதற்கான திட்டத்தையும் வலி யுறுத்தியுள்ளார்.குறிப்பாக ஜி7 கூட்டமைப்பில் உள்ள நமது கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாட்டின் மத்திய வங்கிகளை நிர்வகித்துள்ள என்னால் அமெரிக்கா விதித்து வருகின்ற வரிகளை எதிர்கொண்டு சமாளிக்க முடியும். அதற்கான அனுபவம் எனக்குள்ளது என அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.  


ஒற்றுமை, ஜனநாயகம், பொருளாதாரப் பின்னடைவு ஆகிய வற்றின் முக்கியத்துவத்தை குறித்து தனது பிரியா விடை உரையில் பேசிய ட்ரூடோ,”எந்த தவறும் செய்யாதீர்கள், இது ஒருதேசத்தை கட்டி எழுப்பக் கூடிய நேரம். ஜனநாயகம் கொடுக்கப்படவில்லை.  


சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. ஏன் கனடா கூட யாரோ கொடுத்ததல்ல” என்று பேசினார். என்னைத் தவறாக நினைத்துக்கொள்ளா தீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதில் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கி றேன். நமது நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் கனடா குடிமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.