பாட்டும் நானே! பாவமும் நானேஎன்று சிவ பெருமான் பாடியதாக *திருவிளையாடல்* திரைப்படத்தில் வரும் பாடலை எழுதியவர் ஒரு *இஸ்லாமியர்* 

 *கவிஞர்.கா.மு. ஷெரிப்* ஆவார்.

கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து" />

tamilnadu epaper

கவிஞர்.கா.மு. ஷெரிப்

கவிஞர்.கா.மு. ஷெரிப்

" *!* பாட்டும் நானே! பாவமும் நானேஎன்று சிவ பெருமான் பாடியதாக *திருவிளையாடல்* திரைப்படத்தில் வரும் பாடலை எழுதியவர் ஒரு *இஸ்லாமியர்* 

 *கவிஞர்.கா.மு. ஷெரிப்* ஆவார்.

கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பாக இருப்பவையாகும். 

கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.

எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக் கின்றனர் நம் தாய் *தமிழ்நாட்டில்* !

---+++++-------


 *கா.மு.ஷெரீப்* ...


இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!


ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் பட பாடலை, 

நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!


அந்தப் பாடல் :

“ *ஏரிக்கரையின்* *மேலே போறவளே* *பெண்மயிலே* …!”

.

ஆம்...

இப்படி ஒரு சில தேர்ந்தெடுத்த திரைப்பட பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !

.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .

.

சொன்னவர் சன் டி.வி. *வீரபாண்டியன்* !


இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் :

.

“இளமையின் கோளாறால், வழி தவறி போய் கருவுற்று கலங்கினாள் மணமாகாத ஓர் *இந்து பெண்* . காதலன் கைவிட்டு விட்டான்.

.

பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் *நேசத்துக்குரிய* *நண்பர்* . 

இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். 

"குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.

.

" வேறு வழியில்லை. கருவை கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.

.

ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?


"உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவை கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ள வில்லை. 


ஆனால், உருவான அந்தக் கருவை காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள் கிறேன்" 


என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்கு பக்கத்திலுள்ள வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.

.

குழந்தை பிறந்ததும் , அந்த பெண்ணை சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 


பிறந்த அந்த குழந்தையை தன் மனைவி ஈன்ற மகவாக கூறி , வளர்த்து ஆளாக்கினார். 

.

அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் பேசியவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”


 *நெகிழ்ந்து* *போனேன்* 

வீரபாண்டியன் சொன்னதை படித்து விட்டு !


இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் , 

பிற சமயத்தாரையும் மதித்து போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக , 

அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப்.

 

" *அன்னையை போலொரு தெய்வ மில்லை அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை* .”

.

இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..!

.

அந்தப் பாடலில் கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் :


“துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை

சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”

.

இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..!

மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் !


 *பணம் பந்தியிலே* *குணம்* *குப்பையிலே* ’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.


 ‘ *சிட்டுக்குருவி* *சிட்டுக்குருவி* *சேதி தெரியுமா* ?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.


 ‘ *ஒன்று சேர்ந்த* *அன்பு மாறுமா* ? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ *ஏரிக்கரையின்* *மேலே போறவளே* பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.


 இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

.

 *வாழ்க* 

 *கா.மு.ஷெரிப்* *புகழ் ..!* 


 *வளர்க மனித நேயம்.!