உலகில் உயிர்கள் வாழ்ந்திட
முதலில் தேவை காற்று
இயற்கை அன்னை அன்பாகத்
தந்திடும் கொடையே காற்று.
இசையும் மணமும் ஏந்திவரும்
இனிய வாகனம் காற்று
உணவைச் சமைக்கும் நெருப்பதனை
எரிய வைப்பது காற்று.
கதவு ஜன்னல் திறந்தாலே
வீட்டில் நுழைந்திடும் காற்று
கடின உழைப்பால் உருவாகும்
வியர்வை துடைப்பது காற்று.
வாகனப் புகை கலந்தாலும்
நெகிழி ரப்பரை எரித்தாலும்
மாசு கலக்கும் என்பதால்
அதுபோல் செயல்களை நீக்கு.
காற்றைத் தூய்மைச் செய்திடும்
பணியைச் செய்வது மரங்களாம்
அதனால் மரங்கள் நட்டுவைத்து
காற்றை என்றும் போற்று.
-கீர்த்தி