tamilnadu epaper

குமரி கண்ணாடி பாலத்தில் மீண்டும் பயணிகள் அனுமதி

குமரி கண்ணாடி பாலத்தில்  மீண்டும் பயணிகள் அனுமதி


நாகர்கோவில், ஏப். 20– 


கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைத்து கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு, ஜன., 1ல் திறக்கப்பட்டது. கடலின் உள்ளே பாலம் அமைந்துள்ளதால் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாவது முறையாக கடந்த 15-ம் தேதி பராமரிப்பு பணி தொடங்கியது. டெல்லியில் உள்ள அரசு ஏஜென்சி நிறுவனமான ரைட்ஸ் மற்றும் அண்ணா பல்கலை துாத்துக்குடி கேம்பஸ் பொறியாளர்களுடன் இணைந்து பராமரிப்பு பணி நடந்தது. 

பாலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்க தலா 200 கிலோ எடையுள்ள தண்ணீர் நிரப்பப்பட்ட 962 பிளாஸ்டிக் டிரம்களை 24 மணி நேரம் வைத்து சோதனை செய்யப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து காலை, 8 மணி முதல் கண்ணாடி கூண்டு பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.