tamilnadu epaper

குமரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை

குமரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை


நாகர்கோவில், ஏப்.22–

குமரி மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏ., ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்தது

குமரி மாவட்டம் கருங்கல், மிடாலம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டை வருவாய் துறையினர் ஜேசிபி இயந்திரத்தோடு இடிக்க வந்தனர். அதை வீடு கட்டிய ஜோசப், பால்துரை, சுபிதா, ஆமோஸ், டிட்டோ, மற்றும் அப்போதைய இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் தடுத்தனர். இந்த சம்பவம் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக நாகர்கோவில் முதன்மை சார்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. 

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசன் முகமது, தற்போதைய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், சுபிதா, ஆமோஸ் ஆகிய மூன்று பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.