குறள் வழி நடப்போம்: திருக்குறள் ஆத்திசூடி நூல் வெளியீட்டு விழாவில் ஆரணி எம்பி பேச்சு*
வந்தவாசி, ஜூலை 01:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலய வளாகத்தில் சுதந்திர இந்தியா அமைப்பு சார்பில் நேற்று திருக்குறள் திறனறியும் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் திருக்குறள் ஆத்திசூடி என்ற நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறினார். பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சுதாகர், மருதாடு முன்னாள் தலைவர் இராதாகிருஷ்ணன், இயக்க தலைவர் காமராசு, நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனுவாசன், நகர செயலாளர் தயாளன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, துணைத் தலைவர் பா. சீனிவாசன், இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு, சுதந்திர இந்தியா இயக்க வந்தவாசி பொறுப்பாளர் ஆசிரியர் செல்வமணி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.