பெரம்பலூர், ஏப்.16 -
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணா (எ) குணசேகரன். விவசாயி யான இவர், பெரம்பலூர் நகர் பகுதியில் கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்களை தேடி நடமா டும் இலவச நீர், மோர் கடையை ஆரம்பித்து உள்ளார். இந்த நடமாடும் கடை யில் இலவச நீர், மோர் மற்றும் மலிவு விலை பழம், ஜுஸ் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த நடமா டும் கடையை, மக்கள் நல்வாழ்வுக்கான மருத்து வர் அரங்கம் மாநில செய லாளர் டாக்டர் சி.கருணா கரன், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பி னர் எழுத்தாளர் இரா.எட்வின் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.