இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிய சிந்த னையாளர், நூலாசிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் க.இரா.ஜமதக்னி. சார்லஸ் டார்வின் எழுதிய நூல்களை ஆராய்ந்து ‘உயிர்களின் தோற்றம்’ என்று தமிழில் எழுதிய வர். காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் இவரால் மொழி யாக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகில் கடப்பேரி என்னும் ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே ஜம தக்னிக்கு இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் ஏற்பட்டது. உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங் களில் கலந்து கொண்டு பலமுறை சிறைக்குச் சென்றார். உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட போது காவலர்கள் அவர் மண்டையில் அடித்ததால் மயக்கமுற்று மருத்துவமனையில் கிடந்தார். சிறையில் இருந்தபோது நூல்கள் பலவற்றை எடுத்துத் தம் அறிவை வளர்த்துக் கொண்டார். இத்தகைய அறிஞருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.25 லட்சம் செலவில் நினைவுத் தூண் நிறுவப்படும்.