சங்கரன்கோவில், ஏப். 22
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள சங்குபட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தலைமை வகித்து புரட்சியாளர் அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், மண்டல துணைச் செயலாளர் குழந்தை வள்ளுவன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன், டாஸ்மார்க் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் முருகன், தொகுதி செயலாளர் பீர்மைதீன், தொகுதி துணைச் செயலாளர் ஜெரால்ட், குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் துர்க்கையம்மாள், கலை இலக்கிய பேரவை இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.