பாஜக ஆளும் சத்தீஸ்கரில்பிஜாப் பூர் மாவட்டத்தில் வியாழ னன்று காலை 7 மணியள வில் பிஜாப்பூர் - தண்டேவாடா மாவட்டங் களின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சத்தீஸ்கர் காவல் துறையினர் இணைந்து நிகழ்த்திய என்கவுண்டரில் 18 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சல்களின் பதில் தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படை காவலர் ஒருவர் வீர மரணமடைந்ததாக வும், சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிக ள், வெடிபொருள்களுடன் 18 நக்சல்க ளின் உடல்கள் மீட்கப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதே போல கான்கர் மாவட்டத்தில் 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த 2 என்கவுண் டர்கள் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நக்சல்கள் என 22 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.