tamilnadu epaper

சமத்துவ நாள் உறுதிமொழி.....

சமத்துவ நாள் உறுதிமொழி.....



ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் குறித்தும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றுவதில் அவரின் பங்களிப்பு குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினார்.


பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, சத்துணவு அமைப்பாளர் பீமன் ஆகியோர் பங்கேற்றனர்.