வந்தவாசி, ஏப் 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில் சித்திரை மாத திருவோண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு வண்ண மலர் மாலைகள் சாற்றப்பட்டு அர்ச்சனையும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இந்த வைபவத்தை ஸ்ரீகைங்கர்யம் டிரஸ்ட் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் குங்குமம், தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.