tamilnadu epaper

சின்னம்மா

சின்னம்மா

வாசு -பிரியா தம்பதியரின் ஒரே செல்ல மகன் ரஞ்சன் .

ரஞ்சன் மீது அளவுகடந்து அன்பும் ,பாசமும் வைத்திருந்தனர் .அவர்களது உலகமே தன் பிள்ளை ரஞ்சனாகத் தான் இருந்தது .

ரஞ்சனுக்கு அப்பா ,அம்மா இருவரையும் பிடிக்கும் ஆனால் அப்பாவை விட அம்மா பிரியா மீது தான் தன் உயிரையே வைத்திருந்தான் .

தாய் பாலை மூணு வயசு வரைக்கும் அவன் விடவே இல்லை .எருமை மாடு மாதிரி வளர்ந்து இருந்தாலும் அவனுக்கு தானா சாப்பிட தெரியாது .

அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவான் .மத்த பிள்ளைங்க மாதிரி ஸ்கூல் விட்டு வந்ததும் வெளியே எல்லாம் போய் விளையாட மாட்டான் .அம்மா முந்தானையை பிடிச்சுக்கிட்டு அடுப்பங்கரை ,மற்றும் பிரியா அம்மாவோடு சேர்ந்து சீரியல் பார்ப்பான் .அம்மா இல்லாமல் அவன் உலகம் இல்லைன்னு கூட சொல்லலாம் .ரஞ்சனுக்காக இன்னொரு பிள்ளை கூட அந்த தம்பதி பெத்துக்கலை.

 

அந்த குடும்பத்துக்கு யாரு கண்ணு பட்டதோ தெரியலை .மஞ்ச காமாலை வந்து பிரியா அகால மரணமடைந்து விட்டாள்.தன் அம்மாவின் இறப்பை அவனால் நம்ப முடிய வில்லை .எந்நேரமும் அம்மாவின் புகைப்படத்தை வைத்து கொண்டு அழுது கொண்டே இருந்தான் .உணவு இல்லை ,உறக்கம் இல்லை எந்நேரமும் அம்மா ,அம்மா என்று அழுது கொண்டே இருந்தான் .தன் மகனின் நிலையை சரி செய்ய தன் மனைவியின் தோழி சாவித்திரியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டான் .வாசுவுக்கு ஒரு மனைவி கிடைத்து விட்டாள் .

ஒரு சில வாரங்களுக்கு பிறகு அவர்களுக்குள் நடக்க வேண்டிய எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களும் நடந்து முடிந்தன .

ஒரு சில மாதங்களுக்கு பிறகு 

முன்பு மாதிரி ரஞ்சன் கலகலப்பாக இருப்பதில்லை.முகத்தில் எப்போதும் ஒரே கவலை ,ஸ்கூல் முடிந்து வந்ததும் வெளியே சென்று விடுகிறான் .வீட்டில் அதிகம் இருப்பதில்லை .

ஒரு ஞாயிற்று கிழமை தனிமையில் வாசு இருந்த போது ரஞ்சனிடம் சின்னம்மா எப்படி நடந்து கொள்கிறாள் என்று கேட்டான் .எனக்கு நீங்க மட்டும் போதும் டாடி .சின்னம்மா வேண்டாம் ,அம்மா மாதிரி அவள் சோறு ஊட்டி விடுவதில்லை ,நானே சாப்பிட்டாலும் தரையில் சோறு சிந்தினால் அடிக்கிறாள் ,வீடு கூட்டு ,பாத்திரம் தேய் ,கடைக்கு போ என்று வேலை வாங்குகிறாள் ,அவள் சொல்லுவதை கேட்காத போது பசிக்கின்ற போது சோறு கூட தர மறுக்கிறாள் .உங்களிடம் சொன்னால் கொன்று போட்டு விடுவேன் என்று மிரட்டுகிறாள் ,கடந்த வாரம் கூட அவள் பேச்சை கேட்க வில்லை என்பதற்க்காக தொடையில் சூடு போட்ட வடுவை தன் தந்தையிடம் காட்டினான் ரஞ்சன் .

எந்த ஒரு அம்மாவின் இடத்தையும் எந்த ஒரு சின்னம்மாவாலும் நிரப்ப முடியாது என்பதை கண் கெட்ட பிறகு புரிந்து கொண்டான் வாசு .எந்த சின்னம்மாவையும் அம்மாவை போல் எந்த பிள்ளைகளும் ஏற்பதில்லை 

 

-நௌஷாத் கான் .லி -