tamilnadu epaper

சுங்கக்கட்டணத்தில் விரைவில் சலுகைகள் மத்திய மந்திரி அறிவிப்பு

சுங்கக்கட்டணத்தில்  விரைவில் சலுகைகள்  மத்திய மந்திரி அறிவிப்பு


புதுடெல்லி, மார்ச் 21–

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் விரைவில் சலுகைகள் வழங்கப்படும் என மாநிலங்களவையில் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

 சாலை கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி செலவிடப்படுகிறது. அதற்கான தொகையை சந்தையில் இருந்தே திரட்ட வேண்டி இருக்கிறது. நடப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு, சுங்கக்கட்டணத்திற்காக புதிய கொள்கை ஒன்று வகுக்கப்படும். அதில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் இருக்கும். இதையடுத்து சுங்கச்சாவடிகள் குறித்து எந்தப் பிரச்சினைகளும் இருக்காது. புதிய கொள்கையில் சுங்கக்கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.