சென்னை, மார்ச் 16
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்காக சென்னனை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.