திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு சாமி தரிசனம் .
செய்யாறு ஏப்.20,
திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாறு அருகே
வடபூண்டிப்பட்டு கிராமத்தில் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவின் 7ம் நாளான நேற்று கோதண்ட ராமர் உடன் சீதாதேவி திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு சாமி தரிசனம் செய்தனர் .
திருக்கல்யாணத்தை முன்னிட்டு உற்சவருக்கு
சிறப்பு யாகமும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது .
சீதாதேவியின்
உறவின்முறை பெண்கள் சீர்வரிசை எடுத்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து திருக்கல்யாண வைபவத்தில் விஷ்வக்சேனா ஆராதனை மற்றும் கும்ப பூஜை, அக்னி காரியம் , தேங்காய் பிடிசுத்தல் நிகழ்ச்சி, கன்னிகாதானம்,
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் தாம்பூலம் மாற்றுதல் நிகழ்வு
மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது,
கோயில் அர்ச்சகர் மற்றும் பட்டாச்சாரியார்கள் கோதண்ட ராமர் உடன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்தேறியது .
பெருமாள் திருக்கல்யாண வைபவம் தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது.
சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.