சென்னை, மே 4
தமிழகத்தில் வெயில் தாக்கம்அதிகரித்துள்ளதால் பள்ளிகள்திறப்பு தள்ளிப் போகிறது.
இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.ஜூன் 2ம்தேதி பள்ளிகள்திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஜூன் மாதம் வரை இந்த வெயில் கொடுமை அதிகமாகவே இருக்கும்என்றும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது.அவர் கூறுகையில் , ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கோடை விடுமுறை நீட்டிப்பு தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.
இதனால் ஜூன் 2ம் தேதி பள்ளிகள்திறக்கும் தேதி பத்து நாள் வரை தள்ளிப்போகலாம் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.