சென்னை, ஏப்.19
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். புதிய மருத்துவக் கல்லூரிகள்
அதேபோல், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். எனவே, தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்தவுடன் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.