tamilnadu epaper

தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தில் மு.தமிமுன் அன்சாரி பங்குபெற்ற நிகழ்ச்சிகள்!

தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தில் மு.தமிமுன் அன்சாரி பங்குபெற்ற நிகழ்ச்சிகள்!

பேங்க்காக், மார்ச் 17.

பேங்க்காக்கிலுள்ள தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக பேங்க்காக் பள்ளியில் நிகழ்வுற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர், நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்துகொண்டார்கள்!


நிகழ்ச்சியில் ஜனாப் அப்ஸர், திருக்களாச்சேரி ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி எஸ்.முஹம்மது ஸதுருத்தீன் மஹ்ழரி, பேங்க்காக் மஸ்ஜித் இமாம் அல்ஹாஃபிஸ் ப்பீ.எம்.ஷபீர் அலி ஆலிம் மிஸ்பாஹி, நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன் மற்றும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான், ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாட்டினர் உட்பட சுமார் 600 நபர்கள் கலந்துகொண்டார்கள்.


இரவு தராவீஹ் தொழுகை முடிந்ததும் 'இணக்கத்தை உருவாக்குவோம்!' என்ற தலைப்பில் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சிற்றுரையாற்றினார்கள். மஸ்ஜித் தலைமை இமாம் அவர்கள் துஆ ஓத சொற்பொழிவு நிறைவு பெற்றது. இதில் சுமார் 300 பேர்கள் வரை கலந்து கொண்டு சொற்பொழிவு கேட்டு பயன்பெற்றார்கள்.