tamilnadu epaper

திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்


புதுடெல்லி, மார்ச் 20–

மக்கள் தொகை அடிப்படையில், மக்களவை தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், கனிமொழி என்விஎன் சோமு, பி. வில்சன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பி தொல் திருமாவளவன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.