மதுரை,உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 30ம் தேதி நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலர் பொறுப்பு இளமதி, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், திமுக ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, பழனி, முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.