tamilnadu epaper

நமது தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி இந்த ஒரு வழிபாட்டிற்கு உண்டு.

நமது தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி இந்த ஒரு வழிபாட்டிற்கு உண்டு.

இரண்டு அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் போதும் சகல துன்பங்களும் தூர விலகி வாழ்க்கை வசந்தமாகும்.

 

என்னதான் முயற்சித்தாலும் எல்லாம் நம் தலையெழுத்தின்படி தான் நடக்கும் என்று பலரும் சலிப்புடன் பேசி நாம் பார்த்திருப்போம். 

 

பிரம்மதேவர் படைக்கும் போது நம் விதியை எழுதிவிட்டார் என்றும், அது படி தான் எல்லாம் நடக்கும் என்றும் கூறுவார்.

 

 ஆனால் அப்படிப்பட்ட விதியை மாறக்கூடிய சக்தியானது சப்த கன்னியருள் ஒருவரான பிராமி தேவிக்கு உண்டு என்றால் அது மிகையாகாது. 

 

பிராமி தேவியை நாம் எவ்வாறு வழிபட்டால் நமது விதி மாறும் என்பதை பார்ப்போம்.

 

அசுரர்களை அழிக்க பராசக்தியிடம் இருந்து வெளிவந்த ஏழு கன்னிகள் தான் சப்த கன்னிகள் என்று அழைக்கப்படுகின்றன. 

 

சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாக்க பட்டவர்கள் சப்த கன்னிகள். 

 

அவர்களை பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டீஸ்வரி என்று அழைக்கிறோம். 

 

இவர்கள் அனைவரும் மக்கள் வேண்டும் வரங்களை அளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

 

சப்த கனிமார்கள் 

 

சப்த கன்னிகளில் முதலில் வீற்றிருப்பவள் பிராமி தேவி. 

 

இவர் பிரம்மனின் வடிவத்தில் நான்கு தலைகளைக் கொண்டு இருப்பவள். 

 

மேலும் பிரம்மனுக்கு இணையான சக்தியை தன்னகத்தே கொண்டவள். 

 

இவள் மேற்கு திசைக்கு அதிபதியாக விளங்க கூடியவள். 

 

மேற்கு திசை பார்த்த வீட்டில் இருப்பவர்களுக்கு அந்த வீடு சரியில்லை என்று நினைத்தார்கள் என்றால் வாசலில் விளக்கேற்றும் போது

 

 “ ஓம் பிராமியே நமஹ” என்ற பிராமி தேவி மந்திரம் அதை சொல்லி விளக்கேற்றுவதன் மூலம் மேற்கு திசையால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் விலகி, நன்மைகள் உண்டாகும்.

 

தலைவிதியை மாற்ற வழிபாடு:

 

பிரம்மர் எழுதிய தலையெழுத்தை பிராமி தேவி மூலம் நம்மால் மாற்றி அமைக்க முடியும். 

 

அதற்கு நாம் முதலில் ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 

 

அதில் மஞ்சள் கரைத்த தண்ணீரை ஊற்ற வேண்டும். 

 

பிறகு அதில் கிழக்குப் பார்த்தவாறு இரண்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்.

 

 ஏற்றிய அந்த விளக்குகளை உங்கள் வீட்டில் இருக்கும் அம்மன் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.

 

பிறகு “ஓம் பிராமியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். 

 

இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும்..

 

மேலும் கற்கண்டை நைவேத்தியமாக படைக்க வேண்டும். 

 

இவ்வாறு செய்வதால் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் ஏற்படும். 

 

நம்முடைய தலையெழுத்து மாறி நம் வாழ்க்கை வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

 

பிரம்மனின் வடிவமாக திகழக்கூடிய இந்த பிராமியை நாம் அனைவரும் வழிபட்டு நம்முடைய தலைவிதியை மாற்ற முயற்சிப்போம்.

ப.சரவணன்.