tamilnadu epaper

நலம் தரும் மருத்துவம்

நலம் தரும் மருத்துவம்


தேங்காய் தண்ணீரின் மருத்துவ குணங்கள்

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீரை (இளநீர் அல்ல, உடைத்த தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்) குடித்தால் உடலில் அதிசய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று சமீபத்தில் செய்தி வெளி வந்திருந்தது. மிக உபயோகமாக இருந்ததால் இங்கு பகிர்கிறேன்.

தேங்காய் எண்ணையின் மருத்துவ குணங்கள் யாவரும் அறிந்ததே.

இப்போது நாம் தேங்காய் தண்ணீரின் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

இத்தண்ணீரின் முக்கிய மூலப்பொருள் மொத்த தண்ணீரிலும் உள்ளது.

அது வைட்டமின் சி, கால்ஷியம், மெக்னீஷியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை தன்னுள் அடக்கியுள்ளது.

யு.எஸ்.டி.ஏ. ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி,

100 மி.லி.தேங்காய் தண்ணீர் கீழே வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது : 

ஆற்றல் : 29 கி.கலோரி

புரதம் : 0.30 கி

கார்போஹைட்ரேட்டுகள் : 6.97 கி

சர்க்கரைகள் : 6.36 கி


தாதுக்கள்    

சுண்ணாம்புச்சத்து : 6 மி.கி.

மெக்னீஷியம் : 2 மி.கி.

பாஸ்பரஸ் : 6 மி.கி.

பொட்டாசியம் : 176 மி.கி.

சோடியம் : 12 மி.கி.


வைட்டமின்கள்    

வைட்டமின் சி : 5.5 மி.கி.


தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பாக உடலை சுத்தப்படுத்தும் பானங்களில் ஒன்று.

ரத்தத்தின் ஒரு அங்கமான ரத்த பிளாஸ்மாவை போலவே தேங்காய் தண்ணீரின் குணநலன் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1. நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும்.

2. தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழி வகுக்குகிறது.

3. சிறு நீரக நோய்களை இதை பருகுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

4. உடலிலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றியும் சிறுநீரக கற்களை கரைத்தும் உதவுகிறது.

5. தொடரந்து ஏழி நாட்கள் குடித்தால் தேங்காய் தண்ணீரின் நார்ச்சத்து உடலின் செரிமான பிரச்சனைகள் நீங்கி விடும்.

6. இதை குடித்தால் பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

7. இது உடலின் எலக்ட்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

8. இந்நீரை அருந்துவதால் உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவுடனும் போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

9. கர்ப்பிணி பெண்கள் இதை தொடர்ந்து அருந்தி வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.