tamilnadu epaper

பெற்​றோர் விருப்​பத்தை மீறி திரு​மணம் செய்​வோர் போலீஸ் பாது​காப்பை உரிமை​யாக கோர முடி​யாது: அலகா​பாத் நீ​தி​மன்​றம்

பெற்​றோர் விருப்​பத்தை மீறி திரு​மணம் செய்​வோர் போலீஸ் பாது​காப்பை உரிமை​யாக கோர முடி​யாது: அலகா​பாத் நீ​தி​மன்​றம்


பிர​யாக்​ராஜ்:

பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள், தங்கள் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் உண்மையான அச்சுறுத்தல் இல்லாத வரை, காவல்துறை பாதுகாப்பை உரிமையாகக் கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பெற்றோர் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்த தம்பதியினர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.


தகுதியான வழக்கில் ஒரு தம்பதியினருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க முடியும். ஆனால், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அத்தகைய தம்பதியினர் ஒருவொருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூகத்தை எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.


மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட வாதங்களை ஆராய்ந்ததில் அவர்களுக்கு கடுமையான எந்த அச்சுறுத்தலும் பெற்றோர்களிடமிருந்து வரவில்லை என்பது தெளிவாகிறது. இதனால், மனுதாரர்கள் பாதுகாப்பை நிச்சயமாகவோ அல்லது உரிமையாகவோ கோர முடியாது. எனவே அவர்களது ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.