tamilnadu epaper

பேறுகால உதவித்தொகை பெற்ற 54 லட்சம் பெண்கள்

பேறுகால உதவித்தொகை  பெற்ற 54 லட்சம் பெண்கள்

புதுடெல்லி, மார்ச் 20–

உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/- வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் மகப்பேறு நன்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீதமுள்ள ரொக்க ஊக்கத்தொகையைப் பெறுகிறார், இதனால் சராசரியாக, ஒரு பெண் ரூ. 6,000- பெறுகிறார். இத்திட்டம் தாய்மார்களுக்கு பாதுகாப்பான பிரசவத்திற்கும், முதல் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கும் உதவுகிறது. இதற்கான இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 2023-–24 நிதியாண்டின் போது, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 53,76,728 ஆகும் என்று மகளிர் நலத்துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூர் நேற்று தெரிவித்தார்.