ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் 1998 முதல் 2008ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் தேசிய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக மிரட்டினார். கணிக்க முடி யாத சுழற்பந்துவீச்சு மூலம் இக்கட்டான சூழ் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தவர். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கோக்கைன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக ஸ்டூவர்ட் மெக்கில் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்திய மதிப்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள கோக்கைன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் ஸ்டூவர்ட் மெக்கில் முக்கிய பங்காற் றினார் என காவல்துறையினர் சிட்னி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். தொடர்ந்து சிட்னி நீதிமன்றம் வியாழனன்று ஸ்டூவர்ட் மெக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. எனினும் வியாழக்கிழமை மாலை வரை தண்ட னை விபரம் தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.