tamilnadu epaper

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - அலங்காநல்லூரில் நடந்தது

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - அலங்காநல்லூரில் நடந்தது


அலங்காநல்லூர்,மே.O3


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமை தாங்கினார்.மாவட்டத் துணைச் செயலாளர் விமல்ராஜ், மாவட்ட பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மண்டல செயலாளர் அழகர்,வடக்கு மாவட்ட செயலாளர் அயூப்கான் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்கொள்வது,பூத் கமிட்டி அமைப்பது,கட்சியின் கட்டமைப்பு விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் ஒன்றிய செயலாளர்கள் ரவி, யோகநாதன் மற்றும் ஒன்றிய, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.