அறுசீர் மண்டிலம்
மலரின் மௌனம்
வாசம்
மலர்கள் பேசும்
நேசம்
உலகின் உயிரில்
ஓங்கும்
உண்மை நிலையில்
தேங்கும்!
கலையின் சின்னம்
மலர்கள்
காட்சி வண்ணம்
மலர்கள்
மலைக்க வைக்கும்
மனதை
மயக்க வைக்கும்
மலர்கள்!
வாசத் தாலே
பேசும்
வண்ண மலர்கள்
பாசம்
நேசத் தாலே
பார்க்கும்
நெஞ்சில் அன்பைச்
சேர்க்கும்!
வீசும் தென்றல்
காற்றின்
விளைந்த வாசம்
போற்று
மாசே இல்லா
மலர்கள்
மாண்பாய் ஒரேநாள்
வாழும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.