ஆசிரியர்: கே.ஜி.ஜவஹர்
விலை : ₹220
வெளியீடு: புஸ்தகா
தொடர்புக்கு:9980387852
தலைப்பு உட்பட 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.
அதில் ரசித்த சில உங்கள் பார்வைக்கு:
மாயமான் :
அம்மாவின் மருத்துவச் செலவுக்கும் , தங்கையின் படிப்பு, உடைகள் செலவிற்கும் அல்லாடும் மணி. ரயில்வே கேட் அருகே சுமைதாங்கி கல்லில் அமர்ந்திருக்கும் போது, காரில் வந்து இறங்கும் நடிகை சிந்துவைப் பார்த்து, அவளோடு பேசுகிறான். பலரும் தன்னைத் தொட்டு பார்த்து பேச நினைக்கையில் வெள்ளந்தியான மணியின் குணம் பிடித்து தனக்கு டச் அப் செய்ய வரச் சொல்கிறாள். ஒரு மாத படப்பிடிப்பு 3 மாதமாகி அவன் கடன் எல்லாம் தீர, அவள் இயக்குநரிடம் அறை வாங்கி நடிப்பதை பார்க்கிறான். அப்படியேனும் நடிக்க வேண்டுமா எனக் கேட்டதும் நடிப்பு என்பது எனக்கு ரயில் எஞ்சின் போல என்கிறாள்.
16. மன்னித்து விடு மல்லிகா:
தான் காதலித்த பெண்ணை கைவிட்டு, அப்பாவின் கட்டாயத்தால் மல்லிகாவை மணக்கும் அவன், அவளைக் கொலை செய்துவிட்டு காதலி தேவிகாவை கரம் பிடிக்க நினைக்கிறான் வாசு.
அவளை கொலை செய்ய வாசு முயற்சிக்கும் போது, காதலியே தடுக்க காரணம் என்ன? அறியப் படியுங்கள்.
எல்லாமே முத்தான சிறுகதைகள்.
-ஸ்ரீகாந்த்
திருச்சி