தமிழ்நாட்டின் சில சிவாலயங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளரக்கூடிய அபூர்வமலர் – நாகலிங்க பூ. இந்த பூவின் அமைப்பே சிவனை லிங்க வடிவில் நினைவூட்டுகிறது. இது சாதாரண பூ அல்ல – சிவபெருமானுக்கு வில்வம் போலவே சிறந்த பவித்திர பூ எனக்கணிக்கப்படுகிறது.
நாகலிங்க பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்தால் கிடைக்கும் நன்மைகள்:
பூர்வ ஜென்ம பாவங்கள் விலகி, வாழ்க்கையில் திருப்தி ஏற்படும்.
செல்வச் செழிப்பு பெருகி, வீட்டில் சக்தி வாய்ந்த பாசித்தன்மை நிலவும்.
துஷ்ட சக்திகள் விலகும்; வீட்டில் அமைதியும் ஆனந்தமும் நிலைக்கும்.
மன அமைதி, சுவாச கோளாறுகள், நுரையீரல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
முக்கிய வழிபாட்டு முறைகள்:
நாகலிங்க பூவை புனிதமாக குளித்து, சிவ பஞ்சாட்சர மந்திரம் சொல்லி எடுத்தே சமர்ப்பிக்க வேண்டும்.
காய்ந்த பிறகும் இந்த பூ சக்தி வாய்ந்ததே. எனவே குப்பையில் போடாமல் ஓடும் நீரில் விட வேண்டும்.
ஒவ்வொரு பிரதோஷமும் 21 நாகலிங்க பூவால் சிவனை வழிபட்டு, 21 பேருக்கு அன்னதானம் செய்வதால் பிரதோஷ பூஜையின் பலன் பல மடங்கு உயரும்.
மருத்துவ நன்மைகள்:
இந்த பூவின் வாசனை நுரையீரலுக்கு சுகம் தரும். வாசனை திரவிய தயாரிப்புகளிலும் இது பயன்படுகிறது.
ஆண், பெண் மலட்டுத்தன்மை, பிசிஓடி, கருப்பைச் சிக்கல்கள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளில் இது வைத்தியரீதியாக பயன்படுகிறது.
புராண ஆதாரம்:
21 மகரிஷிகள் தங்கள் தவசக்திகளை நாகலிங்க பூவிற்கு அர்ப்பணித்துள்ளனர் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இது ஒரு மிகுந்த தவ பலம் பெற்ற தெய்வீக பூவாகும்.
அறம் வளர்க்கும் வழி:
பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இந்த பூ வழிபாடு தொடர்ந்து செய்யப்படும் போது, நிச்சயம் நல்வாழ்வு நம்மை அணுகும்.
திருச்சிற்றம்பலம்!
ஒவ்வொரு பிரதோஷத்திலும் இந்த பூவால் சிவனை வழிபடுங்கள் – உங்கள் வாழ்க்கை சுத்தம் அடைந்து, இறை அருள் பொங்கி வழிவகுக்கும்.
-எம் அசோக்ராஜா _____
அரவக்குறிச்சிப்பட்டி ___
திருச்சி __620015_______