tamilnadu epaper

மோர் இன்றி அமையாது உலகு

மோர் இன்றி  அமையாது உலகு


*கோடை கால*

*உஷ்ணம்* *குறைக்கும்*

*மோர் பானங்கள்:*


 *நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பார்தம் பேருரைக் கின்றோமே பிணி* என்பதற்கிணங்க 


*கோடை வெயிலுக்கு இது ஒரு குளிர் தென்றல்*


இப்பொழுது அடித்து கொளுத்தும் வெயிலுக்கு மிகவும் சிறந்த குளிர்ச்சியான பானம் இந்த மோர் பானம் தான்…


 குளிர்காலத்திற்கு ஏற்ற பானம் என்றால் அதுவும் மோர் தான்.


மோரில்…


விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.


தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


*சிறுநீரகங்களைக்*

*காக்கும் மோர் பானம்*


*தேவையானவை:*


மோர் - கால் டம்ளர்


வாழைத்தண்டுச் சாறு - 1 டம்ளர்


வெள்ளரி விதைப் பொடி - 1 டீஸ்பூன்


இந்துப்பு - தேவையான அளவு.


*செய்முறை:*


வாழைத்தண்டுச் சாறுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப் பொடி மற்றும் இந்துப்பு கலந்து, வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.


*குறிப்பு:*


சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை அருந்துவது போதுமானது.


*பலன்கள்:*


சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும் சிறந்த பானம்.


இதைத் தொடர்ந்து பருகினால், 5 மி.மீ-க்கும் குறைவாக உள்ள சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.


சிறுநீரகத்தைச் சுத்திகரித்து, உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.


பித்தப்பையில் உள்ள கற்களைக் கரைக்கவும் இது உதவும்.


ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றும்.


*எலும்புகளை*

*பலப்படுத்தும்*

*கேரட் மோர் பானம்:*


*தேவையானவை..*


மோர் - 1 டம்ளர் 


புதினா இலை - கைப்பிடி அளவு 


கொத்துமல்லி தழை - சிறிதளவு 


கேரட் துண்டுகள் - ஒரு கப் 


வறுத்த சீரகம் - சிறிதளவு 


 உப்பு -:ஒரு சிட்டிகை. 


முதலில் கொத்துமல்லி, புதினா மற்றும் கேரட்டை அரைத்துக்

கொள்ளுங்கள். பின்னர் அதில் மோரை சேர்த்து சீரகத்தை தூவி அருந்துங்கள். 

இது மிகவும் ஊட்டச் சத்து நிறைந்தது. கொழுப்பற்றது. கால்சியம் அதிகமாக இருக்கும். எலும்புகளை பலப்படுத்தும். ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்ட் அதிகம் உள்ளது,. நோய் எதிர்ப்பு சக்தியை தரும். சுறுசுறுப்பினை தரும்


*உஷ்ணம் குறைக்கும்* 

*வெந்தய மோர் பானம்*


*தேவையான பொருட்கள்:*


வெந்தயம்- 1 கப் 


மிளகு-1/4கப் 


சுக்கு-சிறு துண்டு 


மோர் - 1 கப் 


*செய்முறை:*


வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். 


கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.


*வெள்ளரி வெங்காய* 

*மோர் பானம்*


*தேவையான பொருட்கள்:*


மோர் -- 2 கப்


வெள்ளரி -- ஒன்று


வெங்காயம் - ஒன்று


பெருங்காயப்பொடி -- அரை டீஸ்பூன்


ஜீரகப்பொடி -- அரை டீஸ்பூன்


உப்பு -- தேவையான அளவு


கொத்துமல்லித் தழை -- ஒரு கைப்பிடி


*செய்முறை:*


1.வெள்ளரி, வெங்காயம் தோல் நீக்கி துருவி மிக்சியில் நைசாக அரைக்கவும்.


2.மோரில் இந்த விழுது உப்பு, பெருங்காயப்பொடி, ஜீரகப்பொடி கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.


கோடைகாலத்துக்கு ஏற்ற குளுமையான பானம் இது.


*பூண்டு* 

*மோர் பானம்*


*தேவையானவை..*


தயிர் - அரை கப்


பெரிய பூண்டு பல் - 1


சீரகத்தூள் - அரை டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


குளிர்ந்த தண்ணீர் - 2 கப் தயிர், 


பூண்டு, சீரகத்தூள் மற்றும் உப்பை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதில் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து அடித்து வடிகட்டி பரிமாறவும். வாசனை தூக்கலாக இருக்கும் இந்த மோரை அரபு நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அடித்து கொளுத்தும் வெயிலுக்கு மிகவும் சிறந்த குளிர்ச்சியான பானம் இது.


*புர்ஹானி* 


*மேற்கு வங்காளத்தில் பருகப்படும் மோர் பானம்.*


 *புர்ஹானி செய்ய தேவையான பொருள்கள்:*


தயிர் 500g, 


எழுமிச்சை பழம் 1, 


கருப்பு உப்பு தேவையான அளவு, 


சாட் மசாலா 1tsp. 


தண்ணீர் தேவையான அளவு.


அரைக்க....


மிளகு 11/2 tsp, 


சீரகம் 11/2 tsp, 


மல்லி இலை, புதினா இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி அளவு, 


இஞ்சி ஒரு சிறிய துண்டு,


*செய்முறை:*


1- முதலில் தயிரை நன்றாக அடித்துக்கொள்ளவும்


2- அரைக்க வேண்டிய சாமான்களை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து அதன் சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.


3- பிறகு இந்த சாறை அடித்துவைத்த தயிருடன் கலக்கவும்.


4- இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கருப்பு உப்பு, எழுமிசை சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கூலாக பரிமாரவும்.


இது மேற்க்கு வங்காளத்தில் பருகப்படும் மோர் பானம். இதனை பிரியானி சாப்பிடும்போது பருகுவார்கள். பிரியானி சாபிட்டு புர்ஹானி அருந்தினால் நன்றாக செரிமானம் ஆகும்.


*வெள்ளரி* 

*மோர் பானம்*


*தேவையான பொருட்கள்:*


மோர் – 1 கப் 


வெள்ளரிக்காய் – 1 


உப்பு – தேவையான அளவு 


ஐஸ் கியூப்ஸ் – 5 ( தேவைப் பட்டால்)


மிளகு தூள் – சிறிதளவு 


கொத்தமல்லி தழை – சிறிதளவு 


இஞ்சி – சிறிதளவு


*செய்முறை :*


கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சிய மிக்சியில் போட்டு சிறது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.


ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் வெள்ளரி சாறை ஊற்றவும். பின் மோர் ஊற்றி அதன் மேல் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து பருகவும்.


மோர், வெள்ளரி இரண்டும் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தருபவை. கோடைக்காலத்தில் இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள நீர்சத்து குறையால் தடுக்கலாம்.


 சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வாறு செய்து குடிக்கலாம்.


*மாம்பழ* 

*மோர் பானம்:*


*தேவையான பொருட்கள்:* 


நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று 


புளிப்பில்லாத மோர் - அரை டம்ளர் 


உப்பு - அரைடீஸ்பூன் 

வேண்டிய அளவு - ஐஸ் தண்ணீர் 


*செய்முறை:* 


மாம்பழத்தைத் தோல் சீவித் துண்டங்களாக வெட்டி மிக்சியில் போட்டு கூழாக மசித்துக் கொள்ளவும். 


பின் அதனுடன் மோரையும், உப்பையும் சேர்த்து மிக்ஸியைச் சற்று ஓடவிட்டு எடுத்து ஐஸ் தண்ணீரைச் சேர்த்து கண்ணாடித் டம்ளர்களில் விட்டுப் பருகவும். 


கோடை வெயிலுக்கு உகந்த உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பானம் இது.


*மோருடன் எதை கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும்…*


கறிவேப்பிலை இலைகளை மோர் சேர்த்து அருந்தி வர உடல் எடை குறையும்.


மோர் மற்றும் கேரட் போட்டு அரைத்து குடித்து வர உடல் இளைக்கும்.


ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும்.


கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.


புளியாரைக் கீரை, வெந்தயம் அரைத்து மோரில் சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.


பெருங்காயத்தை பொரித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.


200 மி. லி மோரில், வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.


சீரக பொடியை மோரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குறையும்.


முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும்.


கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட மஞ்சள் காலை குறையும்.


எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் சேர்த்திக்கொள்ள பித்த சூடு தணியும்.


வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்க பட்டு, தோல் நோய் குறையும். மோரில் சிறிதளவு வெங்காயச் சாறு விட்டு குடிக்க இருமல் குறையும்.


*மருத்துவ பயன்கள்:*


 தயிரை விடச் சிறந்தது. மோர் எளிதில் ஜீரணமாகக் கூடியது.


 உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.


 பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்று வலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.


 மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.


 வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக் கெல்லாம் மோர் சிறந்த மருந்து.


 மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.


 வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.


 நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!


 நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமை கூட மோருக்கு உண்டு!


 பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.


 குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.


 வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரை அ‌ப்படியே குடித்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.


 காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.


 எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.


 காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும்.


 வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும்.


 மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.


 இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.


 மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.


 மேலும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்


 மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.


 சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாகஉ‌ள்ளது. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வந்தால் நல்ல பலன் தெ‌ரியு‌ம்.


 சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த துணியால் க‌ட்டு‌ப் போட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.


 தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


*குறிப்புகள்:*


கோடை காலத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும் வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும்.


ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர்சாதமும் கூடாது.


ஜில்லுன்னு செய்து பருகிவிட்டு கருத்துக்கள் பகிரவும்.


-மண்ணச்சநல்லூர் பாலசந்தர்