உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று உக்ரைன் அதிகாரிகளுடன் அமெ ரிக்கா பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலை யில் சில நாட்களிலேயே ரஷ்ய அதிகாரிகளுட னான சந்திப்புக்கான அறிவிப்பும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் பேச்சுவார்த்தைக் கான தேதி மற்றும் பங்கேற்கும் நபர்களின் விவ ரங்கள் தெரிவிக்கப்படவில்லை.