tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-17.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-17.04.25


அன்புடையீர்,


 வணக்கம். இன்று வாசகர் கடிதத்தை ஒரு கவிதை வடிவில் எழுதுவதை பெருமையாக எண்ணுகிறேன்.


அதிகாலைப் பொழுதில்

ஆர்வமுடன் என் அலைபேசியை

இயல்பாகத் தொடும் 

ஈடில்லா நாளிதழ்

உண்மையுடனும்

ஊக்கத்துடனும் 

எல்லா செய்திகளையும் 

ஏற்றமுடன் கொடுப்பதில்

ஐயமின்றி சொல்வேன் 

ஒரு நாளிதழ் 

ஓங்கும் புகழ் சேர்க்கும் தமிழ்நாடு இ பேப்பர்

ஔடதமாக ஒவ்வொரு பகுதியும் 

அஃதே எனக்கு நல்ல நாள் என பஞ்சாங்கம் முதல் பல்சுவை களஞ்சியம் பகுதி இன்றைய தலைவர் என எல்லா பகுதியாலுலும் என்னை ஆக்கிரமித்துக் கொண்ட தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் 


நன்றி 

-உஷா முத்துராமன்