tamilnadu epaper

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-17.04.25

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-17.04.25


      அகத்திக் கீரை அருமருந்து. மற்ற கீரைகளைப் போல் தினந்தோறும் உண்ணக் கூடாது என்பர். வயிற்றுப் புண்ணை ஆற்றும் . அதனால் தான் வைகுண்ட ஏகாதசி அன்று உண்ண நோன்பு இருந்தோர் மறுநாள் காலை நோன்பை முறிக்கும் போது அகத்திக. கீரையைக் கண்டிப்பாக உணவில் சேர்க்கச் சொல்கிறார்கள்.

      கக்கன் தமிழ்நாடறிந்த நேர்மையான அரசியல் வாதி. அவர் வரலாறும் இன்று வெளியாகியிருக் கிறது. சிறப்பு.

       மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினராக நியமிப்பது நல்ல சிந்தனை தான். அவர்கள் 

குழு கூட்டம் பொதுப்பணியில் ஈடுபட முடியுமா? அதனால் பலனுண்டா ? என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.

    தேனி மாவட்த்தில் சுற்றிப் பார்க்கத் தகுந்த இடங்கள் சிறப்பானவை.

    தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி கிருமிகள் தொற்று இருப்பதாக அமைச்சர் தெரித்திருப்பது அச்சம் ஊட்டுகிறது. குணப்படுமா? மக்கள் விழிப்புணர்வு தேவை.

     மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நூலகம் அமைக்கும் திட்டம் வரவேற்கத் தக்கது.

      திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

பிரபலமானது. இணையவழி உலகெங்கும் அனுப்பும் அளவு வளர்ச்சி பெற்று இயங்க வருகிறது. விரலுக்குத் தக்க வீக்கம் என்பது போல அங்கும் வரதட்சிணை பிரச்னை

எல்லை மீறி அந்தக் கடையையே எழுதிக் கேட்கும் அளவுக்கு முற்றியிருக்கிறது.

திருமணமாகி குறுகிய காலத்தில் இவ்வளவு பிரச்னை. பாவம் பெற்றோர் என்ன செய்வர். உறவுக்கார மாப்பிள்ளை என்கின்றனர். 

      வாருங்கள் சம்பாதிக்கலாம். நல்ல வழிகாட்டல்.

      மருத்துவ மனையில் குழந்தை காணாமற் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குழந்தைகளைக் கண்ணுங் கருத்துமாக்க் கவனிக்க மருத்துவ மனை பொறுப்புடன் செயல்படும்.

       விண்வெளியில் 11 நிமிடம் சுற்றி வரப் பல கோடி ரூபாய் கட்டணமாம். விண்வெளிச் சுற்றுலா நகர்ப் புறப் பேருந்தில் நகர் வலம் போலாகி விட்டது. என்னே முன்னேற்றம்



-சிவ. சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி