tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஜெயந்தி சுந்தரம்)-16.04.25

வாசகர் கடிதம் (ஜெயந்தி சுந்தரம்)-16.04.25

16-04-2025 விமர்சனம்

இனிய காலை வணக்கம.


 மாநில உரிமைகளை நீக்க உயர்நிலைக் குழு ஏன்? அடுத்தடுத்து மாநில பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம் சட்டம் நீதி ஒழுங்கு ஆகியவற்றை ஒத்திசை பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளை விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது என்றார் முதல்வர். மேலும் அவர் கூறுகையில் இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமை ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு மாநில மக்களின் அடிப்படை உரிமைகளை யே மத்திய அரசிடம் போராடி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றார் அவர். மேலும் அவர் கூறுகையில் நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும் பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும் கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் விதமாகவும் உள்ளது என்றார் அவர். மாணவருடைய மருத்துவ கனவுகள் சிதைந்து போய்விட்டதாகவும் அவர் கூறினார். கடந்த ஒரு நூற்றாண்டகவே தமிழகத்தில் தலை சிறந்த மருத்துவர்கள் உருவாகி வரும் இந்த வேலையில் தரமான கல்வியை கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக் கல்வியையே நாம் சிதைத்து வருகிறோம். இந்த நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களை கலை யும் விதமாக இந்த சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது என்றார். முத்தாய்ப்பாய் அவர் கூறுகையில் மாநில உரிமைகளுக்கான முதல் குரல் தமிழகத்திலிருந்து தான் ஒலிக்கத் தொடங்கும். அனைத்து மாவட்டங்களின் நலன் கருதி இந்த உயர் மட்ட குழு அமைக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் மற்றும் திட்ட குழு முன்னாள் தலைவர் நாகநாதன் நான் உயர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார் என்ற முதல்வர். அடுத்து என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


 ஒரு சிறிய பென்சில் பிரச்சனை அரி வாள் வெட்டு அளவுக்கு கொண்டு விடுகிறது என்றால், மாணவர்களின் கல்வித்திறன் எப்படி வளரும். மனதுக்குள் எப்படி இப்படி ஒரு வஞ்சகம். குழந்தைகள் குழந்தைகளாக இல்லை. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அது நடந்திருப்பது பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில். படிப்புக்கும் பேர் போனது பாளையங்கோட்டை. பாளையங்கோட்டை என்றாலே நம் நினைவுக்கு வருவதும் ஜெயிலும்கூட. வெட்டுப்பட்ட இந்த மாணவரும் ஆசிரியரும் மருத்துவமனையில் அனுமதியாம். ஒரு சிறிய பென்சில் பிரச்சனை அருவாள் வெட்டு அளவுக்கு கொண்டு விட்டிருக்கிறது. யாரை சொல்லி என்ன லாபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோபம் என்பதே பெரிய ஆயுதமாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் கேள்விப்பட்டதும் மிகவும் வேதனையாக இருந்தது. 


 சிந்திக்க ஒரு நொடி நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பிறர் பேசுவதையே நாம் எப்போதும் ஜோக்காக எடுத்துக் கொள்ள முடியாது. முக்கியமான தருணங்களில் அது நமக்கு உபயோகப்படாமல் போகலாம் என்பது என் கருத்து. 


 சுவாரசியமான செய்திகள் இன்னும் இருக்கிறது. டாஸ்மார்க் வழக்கில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய அமலாக்க துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. இனி தொடரும் மெகா சீரியல். தேசிய கடல் சார் மீனவர்கள் கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம். 2016 க்குப் பிறகு இந்த கணக்கு எடுத்தல் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில் மீனவ குடும்பத்தை சந்தித்து புதிய கடல் மீன் ஆராய்ச்சி துறையினரால் பயிற்சி அளிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மீன்பிடி படகு மீன்பிடி வலைகள் மற்றும் கடல்சார் மன்னர்களின் சமூகம் மற்றும் கல்வி பற்றிய சுய விவரங்களை சேரிப்பதோடு அல்லாமல் மீன்பிடி துறைமுகங்கள் மீன்பிடி இறங்கு தளங்கள், மீன் பதப்படுத்தப்படும் நிலையங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு குறித்த தகவல்களும் இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும். இப்படி எல்லாம் வந்து ஒன்று நடக்கிறது என்று தமிழ் e- பேப்பரால் தான் தெரிகிறது.


 மேலும் நலம் தரும் மருத்துவத்தில் முருங்கைக்காயின் பயன்கள் உபயோகமாக இருக்கிறது.


 பராமரிப்பு உரிமை தொகையை 5000 ஆக உயரற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம். இது நடந்தது சென்னையில் கடந்த செவ்வாய் கிழமை. அவர்களின் மற்ற கோரிக்கைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு நியாய விலை கடைகளில் கிடைக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்பது. அடுத்து அரசு காலிபணி யிடங்களை கண்டறிந்து சிறப்பு தேர்வு நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய் வாய்ப்பை வழங்குவதற்கு உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கும் சலுகை இரட்டிப்பாக வழங்க வழி வகை செய்ய வேண்டும். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்த போராட்டம் நடந்தது. முத்தாய்ப்பாய் அவர்கள் கூறியது எங்கள் கோரிக்கைகளை பேசுவதற்கு தமிழக முதல்வர் எங்கள் பிரதிநிதியை அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் ஆலோசிப்போம் என்றனர்.


 வரிகளை குறைக்க வசதி பெற்ற இந்தியர்கள் வருமானத்தை குறை த்து காட்டுவதாக ஆய்வறிக்கை. இந்தியாவில் வருமான சமத்துவமின்மை அதிகமாக இருப்பதாக ஏற்கனவே மதிப்பீடுகள் தெரிவித்துள்ள நிலையில் இப்போது அதை மேலும் அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஞாயிறு வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் 40.1% இந்தியர்களிடம் அதிக செல்வம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. பெரும் பணக்காரர்கள் மீது இரண்டு சதவீதம் அதிகம் வரியை குறைக்க வேண்டும். அப்போது தான் சமத்துவமின்மையை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இஸ்ரேலில் 50000 தொழிலாலர்கள் தேவைப்பத்துவதால் அது பிஹார்,உ. பி. மாநில அரசுகளிடம் கேட்டு கடிதம். கட்டிட பணிக்காக இவர்கள் கோரப் ப்பட்டுள்ளார்கள். 25 லிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்களாம். பீகார் உத்தரபிரதேசம் உழைப்பு வெளிநாடு வரை தெரிகிறது.


 புதிய செயல் திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரியுடன் புதிய செல்போன். அப்போ பழைய போனை என்ன செய்வதாம். 

 அம்பேத்காரின் திட்டங்களை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இல்லை என்று கார்கே குற்றச்சாட்டு. அவ்வப்போது கார்கே இதுபோன்று கருத்துகளுடன் வெளிப்படுவார். 


 சென்னையில் சூப்பர் ஹிட் வெயில்.


 கதை, கவிதை நூல் விமர்சனம், அவதாரம் அனைத்தும் அருமை.

 கோவிலுக்கு சென்று திரும்பும் பொழுது ஏதாவது தொலைந்தால் கவலைப்பட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என்கிற மண்ணச்சநல்லூர் பாலசுந்தரம் கட்டுரை அருமை. தினம் ஒரு தலைவர்கள் அருமை. 


 பல் சுவை களஞ்சியத்தில் வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது என்பது எவ்வளவு நிதர்சனம் என்று படித்த பிறகு தெரிந்தது. சேமிப்பை மட்டும் மனதில் கொண்டு பிற்காலத்தை நாம் இழக்க முடியாது என்கிற வரிகள் ரொம்பவே நிதர்சனம். "அம்மாவும் அப்பாவும் "கதையும் "சோம்பேறி கழுதைக்கு கிடைத்த தண்டனை" கதையும் நன்றாக இருந்தது. குழந்தைகளின் கை வண்ணம் அருமை.


 சரியா போச்சு தமிழகத்தில் 1.57 பேருக்கு எச். ஐ. வி. தொற்று.

 மா சுப்பிரமணியன் அவர்கள் தகவல். இதில் 40000 கு மேற்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர்.


 சபரிமலை சன்னிதானத்தில் முதல் இரண்டு நாளில் நூறு தங்க டாலர்கள் விற்பனை. முதல் டாலரை ஆந்திராவில் மணிரத்னம் என்பவர் பெற்றுக் கொண்டாராம்.


க்ரைம் கார்னர் பயமாக உள்ளது. மதுரையில் சிட்பண்ட் நடத்துவதாக 15.50 லட்சம் மோசடி. அது செய்தது அரசு பள்ளி ஆசிரியை. வேலியே பயிரை மேய்கிறது. மேலும் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட ஆறு கோடி கொகைன் பறிமுதல். 8 பேர் கைது. சென்னை பரங்கி மலையில் 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியது. திடீரென்று ஏன் இப்படி போதை பொருள் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காவல் அதிகாரிகளுக்கு ரொம்பவே பணிச்சுமை ஏற்படுகிறது. அவர்கள் என்னதான் செய்வார்கள். அடுத்த செய்தி மாணவர்கள் இளைஞர்களுக்கு அவருடைய வசிக்கும் விடுதியில் போதை பொருள் வழங்கிய இரண்டு பேர் கைது. சரியாப் போச்சு. 


 யாரையும் நம்பி வேலையை கொடுக்கக் கூடாது என்பதற்கு ஆவடியில் ஆந்திர இளைஞரால் குத்திக் கொல்லப்பட்ட இந்த ரெட்டை கொலையே உதாரணம். வேலை செய்வது போல் செய்து பண்ணை வீட்டை நோட்டம் விட்டிருக்கின்றனர். அந்த வயதான தம்பதிகளை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று இருக்கின்றனர். இந்த கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 60,000 அபராதமும் விதிக்கப் பட்டிருக்கிறது. யாருடைய முடிவு யார் கையால் என்று புரியவில்லை. உலகம் கெட்டு குட்டிச்சுவராகி விட்டது.


 2025-ல் கூடுதலான பருவ மழைப்பொழிவு வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் கணித்தது. வெள்ளம் வராமல் இருந்தால் சரி.


 வெப்ப அலை பாதிப்பால் உயிரிழந்தால் 4 லட்சம் நிவாரணம் என்று தெலூங்கானா அரசு அறிவித்துள்ளது. அந்த அளவு கடும் வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது இந்த வருடம்.


 நேஷனல் ஹெரால்டு வழக்கு. சோனியா ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை. இதன் பின்னணி என்னவென்றால் 2008 ஆம் ஆண்டு ஹெரால்ட் நிறுவனம் மூடப்பட்டது. அப்பவே காங்கிரஸ் கட்சிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் 90 கோடி கடன் பட்டிருந்தது. எஜேஸ் நிறுவனத்திற்கு 50 லட்சம் செலுத்தி தன்னகப்படுத்திக் கொண்டது அதன் பங்குதாரர்களான ராகுல் மற்றும் சோனியா அவர்கள். மீதமுள்ள 80 கோடியை காங்கிரஸ் ரத்து செய்ததால் யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2000 கோடியை முறை கேடாக பயன்படுத்தியதாக செய்தி. இதை கூறியிருப்பது அமலாக்கத்துறை. அமலாக்கத் துறையும் எப்பவும் பிசி தான்.


 வெளிநாட்டு செய்திகளில் வர்த்தக போரை பொறுத்தவரை யாரும் வெற்றியாளர் இல்லை என்று ஜி ஜிங் பிங் கருத்து. இது தெரிஞ்ச விஷயம் தான் பொருளாதாரம்தான் அடிபடும். சரியா போச்சு அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்தம் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா. வர்த்தகப் போர் படுமோசமாக இருக்கும் போலிருக்கிறது. நீயா நானா பார்த்துவிடலாம் என்று இருக்கிறார்கள் இரண்டு நாடுகளும்.

 அடுத்த வர்த்தக போட்டி தீவிரத்தில் அமெரிக்காவின் போயிங் ஜெட் விமானத்தை வாங்குவதை நிறுத்தியது சீனா. முத்தாயப்பாய் ஒரு செய்தி, டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா எழுதிக் கொடுத்த சிங்கப்பூர் ஊழியர். தொழிலாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது என்று ஒரு பெண் தொழில் அதிபர் கூறியுள்ளார்.

 பாவம் அந்த ஊழியர் என்ன கஷ்டப்பட்டாரோ??? மனிதர்கள் பலவிதம் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதம். யாரும் யாவருக்கும் சலைக்கவில்லை போலும்.


-ஜெயந்தி சுந்தரம்