tamilnadu epaper

வைடு, நோ பாலை நீக்க சொன்னால் கூட ஐசிசி நீக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படுகிறது ஐசிசி

வைடு, நோ பாலை நீக்க சொன்னால் கூட ஐசிசி நீக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படுகிறது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா உள்ளார். ஜெய் ஷா தலைவராக பொறுப்பேற்றப் பின் ஐசிசி-யின் செயல்பாடு மிக மோசமாக இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) போன்று, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) செயல்படுவதாக மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் ஆன்டி ராப்ட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஆன்டி ராப்ட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில்,”கிரிக்கெட் மூலம் இந்தியாவிற்கு அதிகமான பணம் கிடைக்கிறது. உண்மை தான். அதனால் கிரிக்கெட் ஒரு நாட்டுக்காக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு தொடரில் ஒரு அணியால் மட்டும் எப்படி எங்குமே (மினி உலகக்கோப்பை - துபாய்) பயணிக்காமல் இருக்க முடியும் என்பது நியாயமானதல்ல. தற்போதைய சூழ்நிலையில் ஐசிசி என்பது பிசிசிஐயாக செயல்படுகிறது. இந்தியாதான் அனைத்தையும் ஆணையிடுகிறது. நாளை வைடு, நோ பாலை நீக்க இந்தியா கூறினால், அடுத்த நாளே ஐசிசி இந்தியாவை திருப்தி செய்ய அதனை நிறைவேற்றும்” என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.