ஹமாஸ் அமைப்பின் தலைவர்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நட த்தியுள்ளது. அமெரிக்க தூதர் ஆடம் பேஹ்ளீர் நடத் திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணையக்கைதி கள் விடுதலை செய்வது தொடர்பான ஒப்பந்தம் வரும் நாட்களில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் இடையே மோசமாகி வரும் பேச்சுவார்த்தையை சரி செய்ய அமெரிக்கா தலையிட்டதாகக் கூறப்படு கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.