2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு எனக்கு நிறைய மிரட்டல் வந்தது. இந்தியா வந்துவிட வேண்டாம். மீறி வந்தால் வெளிய வர முடியாதுனு மிரட்டுனாங்க; விமான நிலையத்தி லிருந்து வீடுவரைக்கும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துலாம் வந்துருக்காங்க, பயந்து ஒளியுற நிலைமைக்குலாம் நான் போயிருக்கேன்; ரசிகர்களோட உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்போ எவ்வ ளவு வெறுத்தாங்களோ இப்போ அவ்வளவு வாழ்த்துறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது” என தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.