வீடுகளில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் இனி தங்களது மாடிகளில் சோலார் பேனல் அமைப்பது கட்டாயமாகிறது.
2025-ம் ஆண்டுக்கான எரிசக்தி கொள்கை மசோதாவில் கேரள அரசு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் வீட்டு மாடியில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சோலார் பேனலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1 கிலோவாட் திறன் கொண்ட பிளாண்டை அவர்கள் நிறுவ வேண்டும்.
அதேநேரம், வர்த்தக ரீதியில் மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது கட்டிடங்களில் 100 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் சோலார் பேனலை நிறுவ வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 3 கிலோவாட் திறனில் இந்த பிளாண்டை நிறுவ வேண்டும்.
கட்டிடத்தின் பரப்பளவு 400 சதுர மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் சோலார் பிளாண்டின் நிறுவு திறன் கட்டாயம் ஐந்து கிலோவாட்டாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு, ஊக்கத்தொகை வழங்க மசோதாவில் கேரள அரசு பரிந்துரை செய்துள்ளதாக கேரள ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.