புதுடெல்லி, மார்ச் 18
இந்தியாவின் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த 1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயதாகிறது. இந்திய திரைத் துறையின் மூத்த நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் 2024 25ம் நிதி ஆண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
இதில் ரூ.120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக, உள்ளார். இதன் மூலம் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ரூ.92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் முதலிடத்தில் இருந்தார். கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த அமிதாப் பச்சன், தற்போது ரூ.120 கோடி வரி செலுத்தியதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்தி உள்ளார்.
அமிதாப் பச்சன் திரைப்படங்கள் மற்றும் பிரபல விளையாட்டு நிகழ்ச்சியான கவுன் பனேகா குரோர்பதியை தொகுத்து வழங்குதல் ஆகியவற்றில் இருந்து வருமானம் ஈட்டி வருகிறார்.